இலங்கை – கியூபா ஜனாதிபதிகள் இருதரப்பு பேச்சுவார்த்தை

55

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை இடம்பெற்றதுடன், கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இருதரப்பு கலந்துரையாடலில், மருத்துவம், சுகாதாரம், விளையாட்டுப் பயிற்சி மற்றும் தெங்குப் பயிற்செய்கை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு உலகளாவிய மாநாடுகளில் இருநாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இருநாட்டுத் தலைவர்களும் உடன்பாடு தெரிவித்தனர்

Join Our WhatsApp Group