ஆசிய கோப்பை தொடர்- டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

23

வங்காளதேச அணி பேட்டிங் செய்து வருகிறது.
இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் மோதுகின்றன.

தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

அதே சமயம் பாகிஸ்தான், இலங்கையிடம் உதை வாங்கிய வங்காளதேசம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. எனவே இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இது வெறும் சம்பிரதாய மோதல் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும்.

பொதுவாக வங்காளதேச அணியினர் இந்தியாவுக்கு எதிராக எப்போதும் கடும் தீவிரத்துடன் விளையாடுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், வங்காளதேச அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கிய நிலையில், இன்றைய நாளில் லேசான மழைக்கே வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group