ஆசிய கிண்ணம் : பாகிஸ்தானை 2 விக்கெட்களால் வீழ்த்தி இலங்கையணி திரில் வெற்றி

32

ஆசிய கிண்ணத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியை இரண்டு விக்கெட்டுகளால் வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றியை பெற்றுள்ளது.
இதன் மூலம் இலங்கையணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இலங்கை அணி வெட்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஒரு பந்துக்கு மூன்று ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்ற திரில் நிலையில் நாலு ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கையணியும் இந்திய அணியும் மோத உள்ளன.
ஆசிய கிண்ணத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு துடுப்படுத்தாடும் இலங்கை அணிக்கு 253 வெற்றி இலக்காகும்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வென்றது.
இந்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.

இன்று பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி மழை காராணமாக தாமதமாகி ஆரம்பமாகியுள்ளமையினால் குறித்த போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group