அமெரிக்க அதிபரின் மகன் ஹண்ட்டர் பைடன் மீது 3 குற்றச்சாட்டுகள்

23

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்ட்டர் பைடன் (Hunter Biden), துப்பாக்கியை வாங்கும்போது பொய் சொன்னதாக 3 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபரின் பிள்ளை குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவது இது முதல்முறை2018ஆம் ஆண்டில் போதைப்பொருள் பயன்படுத்தியபோது ஹண்ட்டர் ஒரு துப்பாக்கியை வாங்கியதாக டெலவேர் (Delaware) மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

போதைப்பொருள் உட்கொள்வதை ஹண்ட்டர் மறைத்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.அந்தத் தகவல் தெரியவந்திருந்தால் ஹண்ட்டர் துப்பாக்கியை வாங்கியிருக்கமுடியாது.தமது குடும்ப உறுப்பினர்களை விசாரிக்க நீதி அமைச்சுக்குச் சுதந்திரம் இருப்பதாக அதிபர் பைடன் கூறியிருக்கிறார்.ஹண்ட்டர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 750,000 டாலர் அபராதமும் விதிக்கப்படலாம்.

Join Our WhatsApp Group