iPhone கைத்தொலைபேசிகளுக்குத் தடையேதும் விதிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.மத்திய அரசாங்க அதிகாரிகள் iPhone கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டன.
அது அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.அதைக் குறிக்கும் எந்த சட்டத்தையும் ஆவணங்களையும் வெளியிடவில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு சொன்னது.வெளிநாட்டைச் சார்ந்த நிறுவனங்களை எப்போதும் வரவேற்பதாகவும் அது கூறியது.
Apple நிறுவனத்தின் பங்கு விலைகள் அண்மையில் கணிசமாகக் குறைந்தன.தடை பற்றிய செய்தியால் பங்கு விலைகள் சரிந்ததாக நம்பப்படுகிறது.Apple நிறுவனத்தின் ஆகப்பெரிய சந்தைகளில் ஒன்று சீனா.