45 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை முதல்வர்! சாட்சியமளித்த பெண்கள்

54

பாகிஸ்தான் நாட்டில் வேலை தருவதாக கூறி 45 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியமளித்தனர்.கராச்சி நகரில் குல்ஷான்-இ-ஹதீத் நகரில் தனியார் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பாடசாலையின் உரிமையாளர் மற்றும் முதல்வராக இருப்பவர் 45 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.இது பற்றிய காணொளி ஒன்றும் சமூக ஊடகத்தில் கடந்த 4-ம் திகதி வைரலானது.இதனை தொடர்ந்து, பாடசாலை முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

அதில், வேலை தருகிறேன் என கூறி அழைத்து, பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார் என நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்தனர்.சந்தேக நபர் இருக்கும்போதே, இரண்டு பெண்களும் தனித்தனியாக தங்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

அவர்கள் பாடசாலை முதல்வரை அடையாளம் காட்டியதுடன், தொடர்ந்து பலமுறை துஷ்பிரயோகத்திற்கு ஈடுபட்டார் என குற்றச்சாட்டு கூறினர்.

Join Our WhatsApp Group