பிறப்புச்சான்றிதழ் இல்லாதோர் தொடர்பில் வெளியான தகவல்

16

நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.எனவே இவர்களுக்கான பிறப்புச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைபடுத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் பிறப்புச் சான்றிதழ் இல்லாத 14 ஆயிரம் பேருக்கு நடமாடும் சேவை ஊடாக பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவமு் தெரிவிக்கப்படுகின்றது.எனவே பிறப்புச்சான்றிதழ் இல்லாதோர் எதிர்காலத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் வேலைத்திட்டங்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group