தாய்லந்துக்கு விசாயின்றிப் பயணம்

28

சீனச் சுற்றுப்பயணிகள் இம்மாத (செப்டம்பர்) இறுதியிலிருந்து விசாயின்றித் தாய்லந்துக்குச் செல்லலாம்.அந்தத் தற்காலிகத் திட்டம் (13 செப்டம்பர்) அறிவிக்கப்பட்டது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு சுற்றுப்பயணத் துறையைச் சார்ந்திருக்கிறது.

COVID-19, பயணம் செய்வோரின் மாறும் பழக்கங்கள்..ஆகியவை நாட்டின் சுற்றுப்பயணத்துறையைப் பாதித்தன.குறிப்பாகத் தாய்லந்துக்குச் சீனச் சுற்றுப்பயணிகள் ஆக அதிகமான எண்ணிக்கையில் வருவர்.2019ஆம் ஆண்டில் 11 மில்லியன் சீனச் சுற்றுப்பயணிகள் தாய்லந்துக்குச் வந்தனர்.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி, அவர்கள் விசாவிற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.பயணக் காப்புறுதி, ஹோட்டல் பதிவு ஆகியவற்றைக் காண்பிக்க வேண்டும்.இந்தத் தற்காலிகத் திட்டம் செப்டம்பர் 25 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 29 வரை நடப்பில் இருக்கும் என்று பிரதமர் செட்டா தர்வீசின் (Srettha Thavisin) கூறினார்.அது தாய்லந்தின் பொருளியலில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதைச் சோதித்துப் பார்க்க உதவியாக இருக்கும் என்றார் அவர்.

Join Our WhatsApp Group