தலைமன்னாரில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்

35

தலைமன்னாரிலிருந்து படகு ஒன்றில் மீன் பிடிக்க சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்கள் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் குறித்த மீனவர்களை தேடிச் சென்ற படகுகளில் இரு படகுகள் கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்றின் காரணமாக கச்சத்தீவில் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (12) மாலை 07.30 மணி அளவில் தலைமன்னார் கிராமம் கடற்கரையிலிருந்து வட கடலில் இரு மீனவர்கள் ஒரு படகில் வலிச்சல் மூலம் மீன் பிடிக்க சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வழமையாக கரை திரும்பும் நேரத்தில் கரை திரும்பாததால் இப்பகுதி மீனவர்கள் கடலில் இவர்களை தேடுவதில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (13) மாலை வரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group