சினிமாவை நற்திசை நோக்கி நகர்த்தும் கலைஞர்களில் ஒருவர் சித்தார்த்- கமல்ஹாசன்

42

இயக்குனர் அருண்குமார் தற்போது ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘சித்தா’ படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் இப்படம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “வித்தியாசமான தமிழ் படங்களை பார்க்க வேண்டும் எடுக்க வேண்டும் என்ற தமிழ் சினிமாவின் உன்னத ரசிகர்களில் ஒருவர் சித்தார். இப்படி சினிமாவை நற்திசையில் நோக்கி நகர்த்தும் பல கலைஞர்களில் முக்கியமான ஒருவர் சித்தார்த். அவர் ‘சித்தா’ படத்தின் நாயகன். சித்தப்பாவாக இருப்பது மிகவும் கடினம் கூட மிகவும் சந்தோஷமானதும் கூட. இந்த சித்தப்பாவின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ‘சித்தா’ திரைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group