கொழும்பில் கனத்த மழை: இந்தியா – இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்…?

52

கொழும்பில் பலத்த மழை மற்றும் மேகமூட்டமான வானிலை இன்று காணப்படுகிறது.

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம், நண்பகல் 12.00 மணி முதல் வழங்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 4 போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை இன்று கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசவில் எதிர்கொள்ளவுள்ளது.

TODAY 14.09.2023

மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டால், இலங்கை அணி இந்தியாவுடன் மோதும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக தாமதமானதுடன், மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.

பிபிசி வானிலையின்படி, மேல் மாகாணத்தில் நாள் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Join Our WhatsApp Group