இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அரிய வகைநிபா (Nipah) வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் ஆகஸ்ட் மாதத்திலும், மற்றவர் சில நாட்களுக்கு முன்பும் இறந்ததாக கூறப்படுகின்றது. அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர்களின் உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நிபா வைரஸால் மூளை செல்கள் அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நோய் தாக்கிய பன்றிகள் மற்றும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படும் நிலையில் ,அதற்கான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.