கிரிக்கெட் 2023 : உலகக் கிண்ணம் கொழும்பு மாநகரில் (படங்கள்)

48

அடுத்த மாதம் இந்தியாவில் உலகக் கிண்ணத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. இதில் வெற்றி கொள்ளும் அணிக்கு வழங்கப்படும் உலக கிண்ணம் இன்று கொழும்பு மாநகரை வந்தடைந்துள்ளது. கொழும்பு உலக வர்த்தக நிலையத்தில் இந்தக் கிண்ணம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்தக் கிண்ணம் உலக வர்த்தக நிலையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

இதன் பின்னர், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஒன் கோல் பேஸ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும்.

படம் -அஷ்ரப் ஏ.சமத்
PIX BY ASHRAF A SAMAD
Join Our WhatsApp Group