பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க

38

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க இன்று (செப்.13) அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இவ்வாறு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் .

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கிடைத்த ஒலிப்பதிவு தொடர்பான குரல் பரிசோதனைக்காக சச்சித்திர சேனாநாயக்க அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

சச்சித்ர சேனாநாயக்கவின் தலையீட்டை உறுதிப்படுத்தும் வகையில் ஒலிப்பதிவை குரல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதவான், முன்னாள் கிரிக்கெட் வீரரை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் குரல் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். அவர் இன்று காலை பொலிஸ் பாதுகாப்புடன் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த சசித்ர சேனாநாயக்க இந்த மாதம் (செப். 06) முற்பகுதியில் கைது செய்யப்பட்டார்.

2020 இல் லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளின் போது போட்டிகளை சரிசெய்ய முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு LPL இன் முதல் பதிப்பில் இரண்டு கிரிக்கெட் வீரர்களை சேனநாயக்க துபாயிலிருந்து தொலைபேசி மூலம் போட்டிகளை சரிசெய்வதற்காக அணுகியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சச்சித்ர சேனாநாயக்க அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

Join Our WhatsApp Group