திருடப்பட்ட Van Gogh ஓவியம் கண்டுபிடிப்பு

29

ஆம்ஸ்டர்டாம் நகரின் அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட Vincent van Gogh ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.1884ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த “Parsonage Garden at Nuenen in Spring” ஓவியத்தின் மதிப்பு சுமார் 3.2 மில்லியன் டாலர்.

திருடுபோன ஓவியத்தை நெதர்லந்தைச் சேர்ந்த கலைப்படைப்புத் துப்பறிவாளர் ஆர்தர் பிராண்ட் (Arthur Brand) காவல்துறை உதவியுடன் கண்டுபிடித்தார்.அதை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நீலநிற IKEA பையில் வைத்துத் தம்மிடம் கொடுத்ததாகப் பிராண்ட் AFP-யிடம் கூறினார்.அது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் Singer Laren அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்டது.

அதைத் திருடிய நபர் 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 8 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் திருடுபோன ஓவியம் பற்றிய தகவல் இரு வாரங்களுக்கு முன்புதான் வெளியே வந்தது.

Join Our WhatsApp Group