செல்லப்பிராணிக்கும் உயில் எழுதலாம்

17

செல்லப்பிராணிகளைச் சிலர் சொந்தப் பிள்ளைகள் போல் வளர்க்கிறார்கள்.ஆனால் ஒருவர் இறந்தபிறகு அவரது செல்லப்பிராணியின் கதி என்ன?அதற்குப் பதில்…….

செல்லப்பிராணிக்கு உயில் எழுதலாம் என்கிறது Financial Advisory எனும் நிதி ஆலோசனை நிறுவனம்.அதற்கான வழிமுறைகளை விவரிக்கிறார் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் திரு. டிலென் இங். உயிலில் குறிப்பிடப்படும் செல்லப்பிராணிக்குச் சொத்துகளை நேரடியாகக் கொடுக்கமுடியாது.

எனவே, செல்லப்பிராணியைக் கவனித்துக்கொள்ள நம்பிக்கையான ஒருவரை நியமித்து அவரது பெயரில் சொத்துகளை எழுதலாம்.அது மட்டும் போதாது. எழுதிவைக்கும் சொத்துகளை நியமிக்கப்பட்டவர் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை முன்கூட்டியே உறுதிசெய்ய முடியும். எப்படி?”Pet Trust” எனும் சொத்து அறங்காவலர் சேவை நிறுவனத்தை நாடலாம்.

அந்த நிறுவனம் உயிலில் நியமிக்கப்பட்டவர் செல்லப்பிராணிக்காகச் செலவிடும் தொகை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனித்துக்கொள்ளும். இதனால் மோசடிகள் நடக்க வாய்ப்பு குறைவு. உயில் எழுதுவதற்கு 100 முதல் $1,000 வரை செலவாகலாம்.

Join Our WhatsApp Group