சிரஞ்சீவியின் 157வது படம்

15

கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதையில் சிரஞ்சீவி நடிக்கிறார். அவரது 157வது படமான இதை யு.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. வசிஷ்டா இயக்குகிறார். வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பளபதி, விக்ரம் ரெட்டி தயாரிக்கின்றனர். தற்போது முன்கட்டப் பணி தொடங்கியுள்ளது. சோட்டா கே.நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

வசிஷ்டா கூறுகையில், ‘மெகா படத்துக்கு இது ஒரு மெகா தொடக்கம். #MEGA157 என்கிற தற்காலிக பெயர் கொண்ட இப்படத்தின் பிரீ-புரொடக்‌ஷன் பணிகளை தொடங்குகிறோம். விரைவில் ரசிகர்களை ஒரு சினிமா சாகசத்துக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளோம்’ என்றார். மேலும், சிரஞ்சீவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Join Our WhatsApp Group