சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து பெற்றோல் கொள்வனவு செய்யும் இலங்கை

26

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நான்கு மாத காலத்திற்கு சிங்கப்பூரை தளமாகக் கொண்ட Vitol Asia Pte Ltd நிறுவனத்திடம் இருந்து பெற்றோலை கொள்வனவு செய்யவுள்ளது.

இம்மாதம் 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி வரையான நான்கு மாத காலப்பகுதியில் 92 வகை ஒக்டேன் பெற்றோலை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சிங்கப்பூரில் உள்ள Vitol Asia Pte Ltd நிறுவனத்திடமிருந்து பெற்றோலை கொள்வனவு செய்வதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்திற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, நான்கு நிறுவனங்கள் விலைமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group