ஒன்பது நாள்களாக குகைக்குள் சிக்கிய அமெரிக்கர்

21

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் டிக்கி ஒன்பது நாள்களாகத் துருக்கியில் உள்ள ஒரு குகைக்குள் சிக்கியிருந்தார்.இந்நிலையில் அவரை அனைத்துலக மீட்புக் குழு (12 செப்டம்பர்) மீட்டது. 40 வயது மார்க் டிக்கி தென் துருக்கியேவில் உள்ள மோர்க்கா குகைக்குள் சென்றார்.

இதன்போது அவர் குகைக்குள் இருக்கும் சுரங்கத்தில் சுமார் 1120 மீட்டர் ஆழத்தில் விழுந்துவிட்டார். இதனையடுத்து மீட்புப் பணியாளர்கள், சக ஆய்வாளர்கள், மருத்துவக் குழுவினர் என்று 200 பேர் அரும்பாடுபட்டு அவரைக் காப்பாற்றி மருத்துமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மார்க்கைக் காப்பாற்றுவதற்குத் துணைபுரிந்த அனைவருக்கும் துருக்கியின் குகைச் சுற்றுலாச் சம்மேளனம் நன்றி தெரிவித்திருக்கிறது.

Join Our WhatsApp Group