உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சர்வதேச விசாரணை தேவையில்லை

31

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணை இலங்கைக்கு அவசியமில்லை என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு மற்றும் உடலகம் ஆணைக்குழு என்பன சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தை நாடவேண்டிய அவசியமில்லை என சட்டத்தரணி சரத் கோன்கஹகே சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் சேனல் 4 புலம்பெயர் நாடுகளின் உதவியுடன் இலங்கை மற்றும் இலங்கையர்களை ஆபத்துக்கு உள்ளாக்குவதற்காக இதனைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு முறையும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நடைபெறும் போது இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேபோன்று இம்முறையும் சேனல் 4 அவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது என சுவிட்சர்லாந்திற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சட்டத்தரணி சரத் கோன்கஹகே தெரிவித்துள்ளார்

Join Our WhatsApp Group