ஆதரவற்றோருக்கு உணவளித்த ஆத்மிகா.. வாழ்த்தும் ரசிகர்கள்

30

நடிகை ஆத்மிகா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆத்மிகா அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இறை நம்பிக்கை அதிகம் கொண்ட நடிகை ஆத்மிகா நேரம் இருக்கும்போது கோவில்களுக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆத்மிகாவின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Join Our WhatsApp Group