iPhone 15ஐ வெளியிடும் Apple நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் உயருமா?

17

Apple நிறுவனம் iPhone 15ஐ இந்த வாரம் வெளியிடுகிறது.அண்மையில் சரிந்த நிறுவனத்தின் பங்குகள் மீண்டும் உயர்வதற்குப் புதிய வெளியீடு உதவுமா இல்லையா என்பதை Apple நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

iPhone தவிர்த்து smartwatch உள்ளிட்ட இதர கருவிகளின் புதிய வெளியீடுகளும் இடம்பெறவுள்ளன.உலகின் மிகப்பெரிய smartphone தயாரிப்பு நிறுவனமான Samsungஐப் பின்னுக்குத் தள்ள Apple நிறுவனம் திட்டமிடுகிறது.அண்மையில் சீனாவில் அரசாங்க ஊழியர்கள் அலுவலகத்துக்கு iPhoneகள் எடுத்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து Apple நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன.iPhone உற்பத்தி வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைச் சீனா ஈட்டுகிறது.

Join Our WhatsApp Group