வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததால் தடம் புரண்ட கெப் ரக வாகனம்

12

கல்முனை பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த ஐஸ் ஏற்றிய கெப் வாகனம் இன்று (12) அதிகாலை தடம்புரண்டது.

கல்முனை பாண்டிருப்பு பிரபல திரையரங்கு ஒன்றுக்கு முன்னாள் உள்ள வளைவில் கெப் வாகனத்தின் பின் சக்கரம் வெடித்ததால் இந்த விபத்து இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அதிகளவான ஐஸ் கட்டிகள் வீதி எங்கும் சிதறியதால் போக்குவரத்து ஒரு சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதே வேளை குறித்த விபத்தின்போது வாகனத்தின் சாரதியும், காப்பாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது

குறித்த விபத்து தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Join Our WhatsApp Group