தவறி விழுந்த இளைஞனின் மரணத்திற்கு ரயில்வே சாரதிகளே பொறுப்பு – அமைச்சர்

33

ராகமை, ஹொரபே பகுதியில் புகையிரதத்தின் மீதேறி பயணித்த போது கீழே விழுந்து உயிரிழந்த இளைஞனின் மரணத்துக்கு இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட புகையிரத சாரதிகள் 84 பேரும் பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஹொரபே பகுதியில் ரயிலின் மேல் ஏறி பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையின் மேல் ஏறி பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரே  ஹொரபே பகுதியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக பல ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டமையினால் குறித்த இளைஞர் புகையிரதத்தின் கூரையின் மேல் ஏறி பயணித்துள்ளார்.  இதன்போது தவறி விழுந்த அவர் ரயிலின் கீழ் பகுதியில் சிக்குண்டு 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதுடைய குறித்த இளைஞரே சம்பவத்தின் போது உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Join Our WhatsApp Group