ஜனாதிபதியின் உத்தேச விசாரணை குழுவை நிராகரித்தது கத்தோலிக்க திருச்சபை

16

விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள உத்தேச விசாரணைக் குழு நகைப்புக்குரியது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் இலங்கை கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.

மக்களின் நிதியை மீண்டும் வீணடிப்பதற்காகவே அன்றி அது தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த காயங்களுக்குள்ளானவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் பாதிரியார் சிரில் காமினி தெரிவித்துள்ளாா்.

சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் சுயாதீன ஆணைக்குழுவொன்றினூடாக விசாரணைகள் இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

இதுவரையில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை மேலும் இணைத்துக் கொண்டு, மீண்டும் அவர்களை அங்கிருந்து அழைத்து விசாரணைகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group