சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு 

35

நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் மீது பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்! கைது நெருக்கடி?

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பில் சீமான் இன்று விசாரணைக்காக ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும் ரூ.95 லட்சம் பணம் மற்றும் நகைகளை அபகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் சீமான் தன்னை 7 முறை கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்ததாக விஜயலட்சுமி கூறிய நிலையில் அதன் உண்மை தன்மையை அறிய கடந்த 7ம் திகதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், சீமான் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 10.30 மணிக்கு வலசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை! அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விளக்கம்

Join Our WhatsApp Group