சனல் 4: சல்லே புகார்; விசாரணையை ஆரம்பித்தார் பிரிட்டிஷ் ஊடக கட்டுப்பாட்டாளர்

16

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக அரச புலனாய்வு சேவையின் (எஸ்.ஐ.எஸ்) தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே செய்த முறைப்பாட்டையடுத்து, பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான நிகழ்ச்சியை, அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தாக்குதலுக்கு உடந்தையாக உள்ளதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சேனல் 4 அண்மையில் வெளியிட்டது.

குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆதாரங்களுடன் இதற்கு முன்னர் உரிய பதில்களை வழங்கியிருந்த போதிலும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சனல் 4 வேண்டுமென்றே காணொளியை ஒளிபரப்பியுள்ளதாக பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை அலுவலகத்திற்கு மேஜர் ஜெனரல் சலே தெரிவித்துள்ளார்.

காணொளி வெளியாவதற்கு முன்னர், சனல் 4 சல்லேயிடம் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்தது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சல்லே அந்த அலைவரிசைக்கு எழுத்து மூலமாக அறிவித்து, அனைத்து குற்றச்சாட்டுகளையும் தாம் மறுப்பதாகவும், கூறப்படும் காலகட்டத்தில் தான் இலங்கையில் கூட இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Join Our WhatsApp Group