கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிப்பு

25

நூருல் ஹுதா உமர்

உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் தற்கொலை தடுப்பு தினத்தை பிரதிபலிக்கும் வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைய கல்முனை பிராந்திய உள நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம் ஜே நௌபல் அவர்களினால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் பணிப்பாளர் சார்பில் பிரதி பணிப்பாளர் டாக்டர் எம்.பி. அப்துல் வாஜித் அறிமுக உரையை நிகழ்த்தி இருந்தார். குறித்த நிகழ்வில் விசேட வளவாளராக கலந்து கொண்ட டாக்டர் எம் ஜே நௌபல் தற்போது தற்கொலைகள் சமுதாய மட்டத்தில் அதிகரித்துச் செல்வதாகவும் இதற்கு பொருளியல் சமூகவியல் காரணிகள் துணை நிற்பதாகவும் இதனை கண்டறிந்து சிறந்த உள மருத்துவத்தினை வழங்கும் போது தற்கொலைகள் உள்ளிட்ட ஏனைய சமூகவியல் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்றும் பங்குபற்றுனர்களை கேட்டுக் கொண்டதுடன் இது தொடர்பில் பாலமுனை இடைத்தங்கள் பிரிவு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளித்தார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி பணிப்பாளர் அவர்கள் சமூக வட்டத்தில் ஆன்மீக கருத்துக்களை அதிகம் பரப்புவதன் ஊடாகவும் சமய நிறுவனங்களின் அனுசரணையை பெறுவதன் ஊடாகவும் தற்கொலைகளை குறைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் மக்கள் தற்காலத்தில் அதிக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகுவதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் இதனை சீர் செய்வதற்கு உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் மருந்துகள் உற்பத்தி என தொழில் நுட்ப அறிவை விருத்தி செய்து செயற்பாடுகளை முன்னெடுக்க பணிப்பாளர் அதிகமான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்

இந்நிகழ்வில் பணிமனையின் பிரிவு தலைவர்களும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் பங்கு கொண்டிருந்தனர்

Join Our WhatsApp Group