இலங்கையில் போதைப்பொருள் குற்றங்களை தடுக்க வேண்டும்; வெளிவிவகார அமைச்சருக்கு ஐ.நா விளக்கம்

28

ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்திய அலுவலக பிரதிநிதியான மார்கோ டீக்சீரா வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்தார்.

குறித்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கைளை மேற்கொள்வது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான தெற்காசிய நாடுகளின் பிராந்திய அலுவலகம் தெற்காசியாவில் முன்னெடுத்துவரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றம் விழிப்புணர்வுகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு ஐ.நா. பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

Join Our WhatsApp Group