ஃபுக்குஷிமா அணுவாலைக் கழிவுநீர் வெளியேற்றம்: முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்தது

15

ஜப்பானில் ஃபுக்குஷிமா அணுவாலையிலிருந்து கழிவுநீரை வெளியேற்றும் முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்தது.கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கை இரண்டரை வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.அதன் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்ததாக ஆலையை நிர்வகிக்கும் TEPCO நிறுவனம் கூறியது.

கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை என நிறுவனம் தெரிவித்தது.திட்டமிட்டப்படியே 7,800 டன் கழிவுநீர் வெளியேற்றப்பட்டதாக TEPCO கூறியது.ஆலையிலிருந்து 3 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதியிலிருந்து கடல்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.அதில் கதிரியக்கப் பொருள்களின் அளவு பாதுகாப்பான வரம்புக்குள் இருந்ததாக TEPCO கூறியது

.அடுத்த 3 வாரங்களுக்குக் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான வசதிகள் பரிசோதிக்கப்படும்.அது நிறைவடைந்ததும் ஆலையிலிருந்து 2ஆம் கட்டமாகக் கழிவுநீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கும் என்றது TEPCO.அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதத்துக்குள் 4 சுற்று வெளியேற்றத்தை மேற்கொள்ள TEPCO திட்டமிடுகிறது.

Join Our WhatsApp Group