13,000 ஓட்டங்கள் பெற்ற வீரர் : விராட் கோலி புதிய சாதனை

19

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக 13,000 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் விராட் கோலி படைத்துள்ளார்.

இவர் 267 ஒருநாள் போட்டிகளில் இவ்வாறு 13,000 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களை கடந்த 5ஆவது வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி தமதாக்கிக்கொண்டார்.

இன்று இடம்பெற்ற போட்டியில் விராட் கோலி 122 ஓட்டங்களை பெற்று 13,000 ஓட்டங்களை கடந்ததன் மூலம் 13,000 ஓட்டங்களை வேகமாக பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

விராட் கோலி இதுவரை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 47 சதங்களையும், 65 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.

Join Our WhatsApp Group