லீ சூறாவளி அமெரிக்காவின் வடபகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம்

14

அமெரிக்க வெர்ஜின் தீவுகளின் வடபகுதியை லீ சூறாவளி கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது அமெரிக்காவைத் தாக்காது என்றாலும், அதனால் ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சூறாவளி, போர்ட்டோ ரிக்கோவின் (Puerto Rico) வடபகுதியில் நகர்ந்துசெல்வதைச் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.இந்த வாரத் தொடக்கத்தில் 5 ஆம் நிலைச் சூறாவளியாகத் தீவிரமடைந்த பிறகு அது 3ஆம் நிலைச் சூறாவளியாக வலுவிழந்தது.தற்போது லீ சூறாவளியால் மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.

தென்மேற்கு அட்லாண்டிக் பகுதியைக் கடக்கும்போது அந்தச் சூறாவளி தொடர்ந்து வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.என்றாலும் அது மீண்டும் வலுவடையக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.கடலில் ஆபத்தான அலைகள் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Join Our WhatsApp Group