ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவு

16

கொழும்பில் இன்று (11) ரயில்வே ஊழியர்கள் ஆரம்பித்திருந்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

பல மாதங்களாக ரயில்வே யார்டுகளில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாததால், இன்று காலை ரயில்வே தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், காலை 10.40 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த டிக்கிரி மெனிகே புகையிரதம் உட்பட 10.00 மணிக்கு பின்னர் பயணிக்கவிருந்த 6 புகையிரத பயணங்களை புகையிரத திணைக்களம் இரத்துச் செய்ய வேண்டியிருந்தது.

அத்தோடு, காலை மற்றும் மதியம் பயணித்த ரயில்களும் காலதாமதமாக பயணித்தன.

ரயில்வே பொது முகாமையாளருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், எதிர்வரும் 25ஆம் திகதி ஊக்கத்தொகை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், மதியம் 2.30 மணியளவில் தொழிற்சங்க போராட்டத்தை ஊழியர்கள் முடிவு கொண்டு வந்தனர்.

ஆயினும், பிற்பகல் ரயில் இயக்கத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group