மட்டக்களப்பு கடற்பரப்பில் நில அதிர்வு

56

மட்டக்களப்புக்கு வடகிழக்கே 310 கிலோமீற்றர் தொலைவில் கடற்பரப்பில் 4.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை 1.30 மணியளவில்  நில அதிர்வு பதிவானதாக இலங்கை புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என இலங்கை புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group