பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுக்கு பெருமை – நடிகர் ஷாருக்கான்

15

பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவுக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.
கிங் கான் என்று அறியப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜி20 உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

ஜி20 உச்சி மாநாடு தொடர்பாக பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவுக்கு பதில் அளித்த ஷாருக்கான், “ஜி20 அமைப்புக்கு இந்தியா வெற்றிகரமாக தலைமை வகித்து, உலக எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுவதற்கு நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருப்பதற்கு மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தெரிவித்து உள்ளார்.

Join Our WhatsApp Group