பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டி : திருக்கோயில் வலயத்துக்கு 5 தங்கப் பதக்கங்கள்

25

( வி.சுகிர்தகுமார்)

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 5 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக 9 பதக்கங்களை பெற்றுக்கொண்டது. இதில் 5 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தினையும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 9,10 ஆம் திகதிகளில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாகாண மட்டப்போட்டியிலேயே 5 தங்கம் 2 வெள்ளி 2 வெண்கலப்பதங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் வலயத்திற்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்ட கராத்தே போட்டியில் கலந்து பங்குபற்றவுள்ளனர்.

கராத்தே மாணவர்களுக்கான பயிற்சிகளை ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தியின் நெறிப்படுத்தலின் கீழ் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே.ராஜேந்திரபிரசாத் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் கே.சாரங்கன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group