பரம எதிரிகள் மோதிய போட்டியில் மீண்டும் சாதித்தது இந்தியா; 128 ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்

26

கிரிக்கெட் உலகில் பரம எதிரிகள் என அனைவராலும் வர்ணிக்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கிண்ண தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று மோதின.

இரு அணிகளும் மோதும் ஆட்டங்களில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை இந்த போட்டியும் நிரூபித்துள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியின் முடிவை தெரிந்துகொள்ள 33 மணித்தியாலங்கள்வரை கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இடையிடையே மழையும் குறுக்கிட்டதால் போட்டியை யார் வெல்ல போகின்றனர் என்ற எதிர்பார்ப்பும் எகிறியது.

இந்நிலையில் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்த இந்த போட்டியில் இந்தியா அணி 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றிபெற்றுள்ளது.

ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய நேற்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 49 பந்துக்கு 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சுப்மன் கில் 52 பந்துகளுக்கு 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 8 ஓட்டங்களுடனும் கே. எல். ராகுல் 17 ஓட்டங்களுடனும் தற்போது களத்தில் உள்ளனர்.

இந்த போட்டியானது மழையால் காரணமாக ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமேயானால் ரிசர்வ் நாளில் ஆட்டம் நடைபெறும் எஅறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று மீண்டும் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 356 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணிசார்பில் விராத் கோலி 122 ஓட்டங்களை கே.எஸ்.ராகுல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

357 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்த பொது மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பமான பொது பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின. அணி தலைவர் பாபர் அசாமும் பாகிஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார்.

பாகிஸ்தான் அணி சார்பில் இரட்டை இலக்கத்தை 4 நான்கு வீரர்கள் மாத்திரமே கடந்திருந்தனர். அதிலும் 30 ஓட்டத்தை எவரும் தொடவில்லை.

பகார் சமான் 27, பாபர் அசாம் 10, சல்மான் 23, அமட் 23 என்ற அடிப்படையில் ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்களை கதறவிட்ட குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆசியக் கிண்ண தொடரின், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 228 என்ற ஓட்ட வித்தியாசத்தில் அபாரா வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியை அதிக ஓட்ட வித்தியாசத்தில் இந்திய வெற்றிகொண்டுள்ளது.

Join Our WhatsApp Group