சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்தியில் சர்வதேச லயன்ஸ் கழகம் பங்களிப்பு

12

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது இயங்கி வரும் கண் சிகிச்சை பிரிவை சர்வதேச லயன்ஸ் கழகத்தின் உதவியுடன் மேலும் விஸ்தரிப்பது சம்பந்தமான கலந்துரையாடல்
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான அன்பளிப்புகளை வழங்குதல் மற்றும் மர நடுகை நிகழ்வு (09) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் கழகத்தின் சர்வதேச பணிப்பாளர் மகேஷ் பாஸ்கால், மாவட்ட ஆளுநர் இஸ்மத் ஹமிட், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி அஸாத் எம் ஹனிபா, சம்மாந்துறை லயன்ஸ் கழக தலைவர் றாபி, பிராந்திய லயன்ஸ் தலைவர் எம்.டி.எம். அனாப், திட்டமிடல் மருத்துவர் நியாஸ் அஹமட், ஆளுநர் செயலாளர் சிறிபால, பொருளாளர் தம்மிக ஏனைய லயன்ஸ் கழக முக்கியஸ்தர்கள்
மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.

Join Our WhatsApp Group