கொழும்பில் இன்றும் மழை காலநிலை : இந்தியா பாகிஸ்தான் போட்டி கேள்விக்குறி

27

கொழும்பு மாநகரில் இன்றும் மப்பும் மந்தாரமுமான கால நிலையே காணப்படுகின்றது.

ஆசிய கிண்ண போட்டிகள் நடைபெறுகின்ற கொழும்பு R.Premadadsa மைதானத்தை அண்டிய பகுதிகளிலும் இன்று காலை கடுமையான மழை பெய்தது. வானிலை அவதான நிலையத்தின் அறிவிப்பின்படி, இன்றும் மழை குறைவடைவதற்கான வாய்ப்பு இல்லை.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கிண்ணத்துக்கான போட்டி ஞாயிற்றுக்கிழமை மழை குறுக்கிட்டதால், இந்தியா 24.1 ஓவர்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் , ரிசர்வ் நாளுக்கு ( இன்று,திங்கட்கிழமை) மாற்றியமைக்கப்பட்டது. ரிசர்வ் நாள் நம்பிக்கையை அளிக்கும் அதே வேளையில், மழையின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் இன்று நடைபெறும் போட்டியில் மீண்டும் தலையிடக்கூடும், இது வெறும் 10 நாட்களில் மூன்றாவது நிகழ்வைக் குறிக்கிறது.

காலநிலை அவதான நிலையத்தின் அறிவிப்பின்படி , கொழும்பில் 92% மழை பெய்யக்கூடிய சாத்திய கூறு தென்படுவதாக அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள போட்டி, மழை பெய்யுமாக இருந்தால், இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் தென்படுவதாகவே தெரிகிறது.

Join Our WhatsApp Group