கனடியப் பிரதமரின் இந்தியப் பயணம் நீட்டிப்பு

12

விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) தமது இந்தியப் பயணத்தை நீட்டிக்க வேண்டியுள்ளது.புதுடில்லியில் நடைபெற்ற G20 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சென்ற வெள்ளிக்கிழமை (8 செப்டம்பர்) இந்தியாவைச் சென்றடைந்தார்.நேற்று (10 செப்டம்பர்) அவர் அங்கிருந்து புறப்படவிருந்தார்.

ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகளால் திரு. ட்ரூடோவும் அவருடன் சென்றிருந்த கனடியப் பேராளர் குழுவும் நேற்றிரவை இந்தியாவில் கழிக்க வேண்டியிருந்தது.அந்தக் கோளாறுகளை ஓர் இரவில் சரி செய்துவிட முடியாது என்றும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அவர்கள் இந்தியாவில் இருப்பர் என்றும் புதுடில்லியில் உள்ள கனடியத் தூதரகம் குறிப்பிட்டது.அது Airbus வகை விமானம் என்று கனடாவின் CTV செய்தி நிறுவனம் கூறியது.அதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பது இது முதல்முறை அல்ல என்றும் அது சொன்னது.

Join Our WhatsApp Group