இன்று முதல் காலை, மாலை வீட்டிற்கே பசும்பால்

43

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் இன்று (11) முதல் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்றைய தினம் நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் வளாகத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group