இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மீண்டும் குறுக்கிட்ட மழை; போட்டி இடைநிறுத்தம்

23

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி மீண்டும் மழையினால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 49 பந்துக்கு 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சுப்மன் கில் 52 பந்துகளுக்கு 58 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியானது மழையால் காரணமாக ரத்து செய்யப்படும் நிலை ஏற்படுமேயானால் ரிசர்வ் நாளில் ஆட்டம் நடைபெறும் எஅறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று மீண்டும் போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய தினம் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 356 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணிசார்பில் விராத் கோலி 122 ஓட்டங்களை கே.எஸ்.ராகுல் 111 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

357 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்த பொது மீண்டும் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group