அலாஸ்காவில் கடலுக்கு அடியில் ‘தங்க முட்டை’ – குழப்பத்தில் ஆய்வாளர்கள்

23

அமெரிக்காவின் அலாஸ்காவில் (Alaska) கடலுக்கு அடியில் மர்மமான ‘தங்க முட்டை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த மர்மப் பொருள் ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக Hindustan Times நாளேடு குறிப்பிட்டது.தேசியப் பெருங்கடல் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அதுகுறித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தது.

முதலில் ‘மஞ்சள் தொப்பி’ என்று வருணிக்கப்பட்ட அது இப்போது ‘தங்க முட்டை’ என்று அழைக்கப்படுகிறது.அதன் விட்டம் சுமார் 10 சென்ட்டிமீட்டர்.”இந்தக் கண்டுபிடிப்பு பெருங்கடலைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டு என்பதை நினைவூட்டுகிறது.

அதனைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல இருக்கின்றன” என்று கடற்பயணத்தின் ஒருங்கிணைப்பாளர் சொன்னார்.அந்த மர்மப் பொருளை மேலும் ஆராயவிருப்பதாகவும் அவர் கூறினார்.சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மர்மப் பொருள் இணையவாசிகளிடையே மாறுபட்ட கருத்துகளைத் தூண்டியதாக Hindustan Times நாளேடு தெரிவித்தது.

Join Our WhatsApp Group