பிரதமர் பதவி, அமைச்சுப் பதவிகளை பெறும் ஆசை எனக்கு இல்லை- மைத்திரி

15

ஜனாதிபதி பதவியை தமக்கு வழங்கினால், அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியையோ, அமைச்சர் பதவியையோ பெற வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்படுவது சகஜம், அவை இன்று இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே, தம்மை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன நீக்கியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Join Our WhatsApp Group