ஜெயம் ரவியின் ‘சைரன்’ தோற்றம்

15

ஜெயம் ரவியின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் ‘சைரன்’. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட் செலவில் எடுக்கப்படும் இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார்.

ஜெயம் ரவிக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி படத்தில் அவருடைய முதல் தோற்றத்தை படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அவரின் 21 வருட திரை வாழ்க்கையில் இதுவரை நடிக்காத தோற்றத்தில் மிரட்டலாக தோன்றியுள்ளார். ஒரு தோற்றம் அமைதி கலந்த கோபமான தோற்றத்திலும் இன்னொரு கதாபாத்திரம் இளமை துள்ளலுடன் ரொமான்ஸ் பார்வையிலும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்று இசை வெளியீடு நடைபெற உள்ளது. ‘சைரன்’ படத்தின் ஜெயம்ரவியின் முதல் தோற்றம் வெளியாகி வலைதளத்தில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

Join Our WhatsApp Group