ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்…!

24

பாரத் மண்டபத்தில் 2-வது நாள் மாநாடு நடைபெற்று வருகிறது
காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியா ஜி20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில், மாநாடுகள் நடைபெற்றன. உச்சி மாநாடு நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இன்றுடன் முடிவடைகிறது.

மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தை தயார் செய்ய சுமார் 2700 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நேற்றிரவு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.

வெற்றிகரமாக மாநாடு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் குளம்போல் பாரத் மண்டபம் காட்சியளிக்கிறது.

Join Our WhatsApp Group