ஜப்பான் பிரதமர் புமியோலின் இலங்கை பயணம் திடீர் ரத்து

14

ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயண ரத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பயண ரத்துக்கான காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group