லண்டனிலிருந்து வந்த தமிழ் யுவதி 13 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

25

** தவறி விழுந்தாரா…?கொலையா…? – கல்கிசை போலீஸ் விசாரணை

கல்கிசையில் உயிரிழந்த தமிழ் யுவதி தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் இலங்கை இளைஞனின் அழைப்பின் பேரில் இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்த யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மற்றும் இளைஞன் ஒருவர் கல்கிஸை – அல்விஸ் பிளேஸில் உள்ள “ப்ளூ ஓஷன் தொடர்மாடியில் தங்கியிருந்த நிலையில் 13வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி நாளை மீண்டும் இங்கிலாந்து செல்லவிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவருடன் பேஸ்புக் ஊடாக உறவை பேணிய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சட்டக்கல்லூரி மாணவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பதில் நீதவான் திருமதி ரத்னா கமகே நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group