நீதி அமைச்சு இரண்டு புதிய வர்த்தமானிகளை வெளியிட்டது

17

ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டம் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கூறுகிறது.

குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் செப்டம்பர் 15, 2023 முதல் அமலுக்கு வரும்.

Join Our WhatsApp Group