நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியுடன் சந்திப்பு ; இருநாட்டு பாதுகாப்பு உறவு குறித்து ஆலோசனை

15

இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் அப்பிள்டன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூவை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சுமுகமான சந்திப்பின் போது இருவரும் பரஸ்பர நலன் மற்றும் அந்தந்த நாடுகளுக்கு அக்கறை செலுத்தும் விடயங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் மைக்கேல் அப்பிள்டன் இருவரும் பல ஆண்டுகளாக தங்கள் நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் பிணைப்புகளை நினைவு கூர்ந்தனர்.

எதிர்காலத்திலும் அந்த ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்குமான முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தினர்.

சந்திப்பின் நிறைவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.

விடைப்பெற்று செல்லும் முன் உயர்ஸ்தானிகர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

Join Our WhatsApp Group